*பாவனை*
“ஒருத்தியைக்
காதலிப்பது
போன்ற பாவனையிலிருந்து
ஆண்கள்
விலகுவதில்லை.
அந்த
பாவனையில்
தன்னைக்
கரைத்துக்கொள்வது
அவர்களுக்கு
உவக்கிறது.
தாங்கள்
கட்டமைக்கும் பாவனையை
ஒருகட்டத்தில்
உண்மை எனவும்
கருதிவிடுகிறார்கள்.
பாவனைகளை
சம்பாதித்து
முத்தமும், குழந்தைகளும் கூட
பெற்றுவிடுகிறார்கள்.
பாவனை
கூட்டிலேயே
பொழுதுகளைக்
கடத்துகிறார்கள்.
வேறு
என்ன செய்வார்கள்
வாழ்வை
பாவனையாக
வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள்..!”
*யுகபாரதி*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*யுகபாரதி*
தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்
கொண்டவர்.
கணையாழி, படித்துறை ஆகிய
இதழ்களின் ஆசிரியக் குழுவில்
ஆறு ஆண்டுகளுக்கு மேல்
இலக்கியப் பங்களிப்புச்
செய்தவர்.
தொடர்ந்து இரண்டு முறை
சிறந்த கவிதை நூலுக்-கான
தமிழக அரசின் விருதைப்
பெற்றவர்.
இதுவரை பத்து கவிதைத்
தொகுப்புகளும் பத்து கட்டுரைத்
தொகுப்புகளும் தன்வரலாற்று
நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
இந்நூல், இவருடைய
பதினொன்றாவது கட்டுரைத்
தொகுப்பு.
வெகுசனத் தளத்திலும் தீவிர
இலக்கியத் தளத்திலும் ஒருசேர
இயங்கிவரும் இவருடைய திரை
உரையாடல்கள் குறிப்பிட்டுச்
சொல்லத்தக்க கவனத்தைப்
பெற்று வருகின்றன.
திரைமொழியையும் மக்கள்
மொழியையும் நன்கு உணர்ந்த
இவர், ஏறக்குறைய ஆயிரம்
திரைப்பாடல்களுக்கு மேல்
எழுதியிருக்கிறார்.
*எழுதிய நூல்கள்*
கவிதைத் தொகுப்புகள்:
1. மனப்பத்தாயம்
2. பஞ்சாரம்
3. தெப்பக்கட்டை
4. நொண்டிக்காவடி
5. தெருவாசகம்
6. அந்நியர்கள் உள்ளே வரலாம்
கட்டுரைத் தொகுப்புகள்:
1. கண்ணாடி முன்
2. நேற்றைய காற்று
3. ஒன்று
4. நடுக்கடல் தனிக்கப்பல்
5. வீட்டுக்கு வெளியே வெவ்வேறு
சுவர்கள்
6. அதாவது
7. நானொருவன் மட்டிலும்
8. நண்மை
மிக அருமை.
ReplyDelete