எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 15 January 2022

படித்ததில் பிடித்தவை (“திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்” – அறிவுமதி கவிதை)

 


*திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்*

 

இரண்டு அடி கொடுத்தால்தானே

திருந்துவாய்

வாங்கிக்கொள் வள்ளுவனிடம்..!

 

*அறிவுமதி*




10 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *அறிவுமதி*

    அறிவுமதி, புகழ் பெற்ற
    தமிழ்க் கவிஞரும் பரவலாக
    அறியப்படும் தமிழ்த் திரைப்பட
    பாடலாசிரியரும் ஆவார்.
    அறிவுமதியின் இயற்பெயர்
    'மதியழகன்'.
    தனது நண்பர் 'அறிவழகன்'
    பெயரையும், தனது பெயரையும்
    சேர்த்து 'அறிவுமதி' என்று
    வைத்துக்கொண்டார்.
    இவர் விருத்தாசலம் நகருக்கு
    அருகில் உள்ள சு.கீணணூரில்
    கேசவன் - சின்னப்பிள்ளை
    (சான்று இரெ.சுப்பிரமணியனின்
    'அறிவுமதி கவிதைகள்- ஓர்
    ஆய்வு' என்னும் நூல்)
    இணையருக்கு மகனாகப்
    பிறந்தார்.
    சிதம்பரம் அண்ணாமலை
    பல்கலைகழகத்தில் முதுகலை
    பட்டம் பெற்றவர்.
    இவரின் தமிழ் இலக்கியத்தின்
    மீது இருந்த விருப்பத்தைக்
    கண்டு கவிஞர் மீரா
    கவிஞர் அப்துல் ரகுமானிடம்
    அறிமுகப்படுத்தினார்.

    கவிஞர் அப்துல்
    ரகுமானிடமிருந்து ஹைக்கூ
    கவிதைகள் எழுதும் கலையை
    கற்றுக்கொண்டார் .

    பாக்யராஜின் உதவி இயக்குநராக
    நான்கு திரைப்படங்களில் தனது
    வாழ்க்கையைத் தொடங்கினார் .
    பின்னர் பாலு மகேந்திராவுடன்
    உதவி இயக்குநராக சேர்ந்தார் ,
    அவருடன் ஒன்பது படங்களில்
    பணியாற்றினார்.
    பாலு மகேந்திராவுக்கு
    உதவுவதற்காக பாலா என்ற
    ஒரு புதிய முகத்தை
    அறிமுகப்படுத்திய அவர் ,
    இயக்குநராக தனது புதிய
    திட்டத்தைத் தொடங்கினார்.
    அவர் முதலில் 'உள்ளேன்
    அய்யா'வுடன் இயக்குநராக
    அறிமுகமாக இருந்தார்,
    இருப்பினும் படம் நிறுத்தப்பட்டது.
    அவர் உதவி இயக்குனராக
    மீண்டும் இணைந்து
    பாரதிராஜாவின் 'புது நெல்லு
    புது நாத்து' மற்றும்
    'கிழக்குச்சீமையிலே' போன்ற
    படங்களுக்கு வேலை செய்தார்.
    இறுதியில் அவர் தனது முதல்
    படமான 'சிறைச்சாலை'
    திரைப்படத்தில் உரையாடல்
    எழுத்தாளராகவும்,
    பாடலாசிரியராகவும் மாறுகிறார்.


    கவிதைத் தொகுப்பு:

    1. அவிழரும்பு
    2. என் பிரிய வசந்தமே
    3. நிரந்தர மனிதர்கள்
    4. அன்பான இராட்சசி
    5. புல்லின் நுனியில் பனித்துளி
    6. அணுத்திமிர் அடக்கு
    7. ஆயுளின் அந்திவரை
    8. கடைசி மழைத்துளி
    9. நட்புக்காலம்
    10. மணிமுத்த ஆற்றங்கரையில்
    11. பாட்டறங் கவிதைகள்
    12. அறிவுமதி கவிதைகள்
    13. வலி

    சிறுகதைத் தொகுப்பு:

    வெள்ளைத் தீ

    குறும்படம் : நீலம்.


    நட்புக்காலம்:
    அறிவுமதியின் மிகச்சிறந்த
    படைப்புகளில் இதுவும் ஒன்று.
    இந்த நூல் ஆண் ‍ பெண்
    நட்பை வைத்து எழுதப்பட்ட
    கவிதைகளின் தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்15 January 2022 at 15:10

      கவிஞரின் நெடிய
      சினிமா பயணம்
      அவரது கவிதையை விட
      சுவாரஸ்யமாக உள்ளது.

      Delete
  2. சூப்பர் சார்

    ReplyDelete
  3. ஸ்ரீதரன்15 January 2022 at 09:33

    வணங்குகிறேன்.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K15 January 2022 at 09:34

    மிகவும் நன்று.

    ReplyDelete
  5. சத்தியன்15 January 2022 at 09:35

    கவிதை மிகவும் அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. மோகன்தாஸ். S15 January 2022 at 09:37

    கவிதை அருமை.
    வணங்குகிறேன்.

    ReplyDelete
  7. சீனிவாசன்15 January 2022 at 09:37

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. வள்ளுவருக்கு வணக்கம்.

    ReplyDelete
  9. கெங்கையா15 January 2022 at 17:53

    கவிதை மிக மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete