எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 10 January 2022

படித்ததில் பிடித்தவை (“எனக்கு பயமாக இருக்கிறது” – ராபர்ட் நெஸ்டா “பாப்” மார்லி கவிதை)

 


*எனக்கு பயமாக இருக்கிறது*

 

நீங்கள்

மழையை நேசிக்கிறீர்கள்

என்று சொல்கிறீர்கள்.

ஆனால் அதன் கீழ் நடக்க

ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்.

 

நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள்

என்று சொல்கிறீர்கள்.

ஆனால் அது பிரகாசிக்கும் போது

நீங்கள் உங்கள் தங்குமிடங்களில்

அடைந்து கொள்கிறீர்கள்.

 

நீங்கள் காற்றை நேசிக்கிறீர்கள்

என்று சொல்கிறீர்கள்.

ஆனால் அது வரும்போது

உங்கள் ஜன்னல்களை

மூடி விடுகின்றீர்கள்.

 

அதனால்தான்

நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்

என்று சொல்லும்போது

எனக்கு பயமாக இருக்கிறது..!

 

 

*ராபர்ட் நெஸ்டா பாப் மார்லி*



6 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *ராபர்ட் நெஸ்டா 'பாப்' மார்லி*

    இயற்பெயர்:

    ராபர்ட் நெஸ்டா மார்லி.

    பிறப்பு:

    பெப்ரவரி 6, 1945
    ஒன்பது மைல்,
    புனித ஆன்,
    ஜமேக்கா.

    இறப்பு:

    மே 11, 1981 (அகவை 36)
    மயாமி, புளோரிடா,
    ஐக்கிய அமெரிக்கா.

    இசை வடிவங்கள்:

    ரெகே, ஸ்கா,
    ராக்ஸ்டெடி.

    தொழில்(கள்):

    இசை எழுத்தாளர்,
    இசைக் கலைஞர்.

    இசைக்கருவி(கள்):

    பாடல், கிட்டார்,
    மேளம்.

    இசைத்துறையில்:

    1962 – 1981.

    வெளியீட்டு நிறுவனங்கள்:

    ஸ்டூடியோ 1, பெவெர்லிஸ்,
    அப்செட்டர்/ட்ரோஜன்,
    ஐலன்ட்/டஃப் காங்.

    இணைந்த செயற்பாடுகள்:

    த வெய்லர்ஸ்,
    த அப்செட்டர்ஸ்,
    ஐ த்ரீஸ்.

    இணையதளம்:

    www.bobmarley.com

    ReplyDelete
  2. கமல நாதன்10 January 2022 at 09:20

    அருமை
    உண்மையும் கூட...

    கவிஞருக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  3. செல்லதுரை10 January 2022 at 10:07

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. அருமை.

    ReplyDelete
  5. சத்தியன்10 January 2022 at 17:23

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்10 January 2022 at 17:24

    கவிஞரின் பயம்
    நியாயமானது தான்..!
    மனிதர்களின் நேசம்
    எப்போதும்
    சுயநலத்தோடு தான்..!

    ReplyDelete