எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 26 January 2022

படித்ததில் பிடித்தவை (“ஸ்டுபிட்ஸ்” – இசை கவிதை)

 


*ஸ்டுபிட்ஸ்*

 

அவ்வளவு பிரதானமான சாலையில்

அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.

பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்.

சுதாரித்துக் கடந்த பிறகு

காலுன்றி நின்று

சாலையைத் திரும்பிப் பார்த்தார்.

 

அதிகாரிகளைப் பார்த்தார்...

அரசைப் பார்த்தார்...

அமைச்சரைப் பார்த்தார்...

முதலமைச்சரை, பிரதமரைப் பார்த்தார்...

ரோடு காண்ட்ராக்டரைப் பார்த்தார்...

 

அந்தப் பள்ளத்துள்

யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ

அத்தனை பேரையும் பார்த்தார்..!

 

*இசை () ஆ.சத்யமூர்த்தி*




3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இசை*
    இயற்பெயர் சத்தியமூர்த்தி.
    வசிப்பது கோயம்புத்தூர்.

    வெளிவந்திருக்கும் நூல்கள் :
    1. காற்று கோதும்
    வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
    2. உறுமீன்களற்ற நதி
    (கவிதைகள்)
    3. சிவாஜிகணேசனின்
    முத்தங்கள் (கவிதைகள்)
    4. அதனினும் இனிது அறிவனர்
    சேர்தல் (கட்டுரைகள்)
    5. அந்தக் காலம் மலையேறிப்
    போனது (கவிதைகள்)
    6. லைட்டா பொறாமைப்படும்
    கலைஞன் (கட்டுரைகள்)
    7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
    8. உய்யடா உய்யடா உய்
    (கட்டுரைகள்)
    9. பழைய யானைக் கடை
    (கட்டுரைகள்)
    10. வாழ்க்கைக்கு வெளியே
    பேசுதல் (கவிதைகள்)

    ReplyDelete
  2. சாலை தவிர அனைவரும் சிறப்பாக இருந்தார்கள்

    ReplyDelete
  3. ஸ்ரீராம்26 January 2022 at 09:04

    ஊழலை நாசுக்காக
    சுட்டிக்காட்டும்
    அழகிய கவிதை

    ReplyDelete