எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 9 January 2022

*தெய்வத்தின் தூதர்கள்*


 அவசர அவசரமாக

பயணிக்கும்

நகரத்து மனிதர்களில்...

 

ஒரு மாற்றுத் திறனாளி

ரயில்வே மேம்பாலத்தை

கடக்க உதவும்

பள்ளி மாணவன்...

 

கண் தெரியாதவரின்

கைப்பிடித்து கவனத்துடன்

சாலையை கடக்க உதவும்

நடுவயது யுவதி...

 

இருசக்கர வாகனத்தில்

வளைவில் திரும்புகையில்

மழைநீர் சகதியில்

சறுக்கி விழுந்தவரை

தூக்கிவிடும் வயதானவர்...

 

என பயணங்களில்

அபூர்வமாக உதவுபவர்களை

பார்க்கும்போதெல்லாம்

அவர்கள் நம் கண்களுக்கு

தெய்வத்தின் தூதர்களாகவே

தோன்றுகிறார்கள்..!

 

*கி.அற்புதராஜு*

12 comments:

  1. ஸ்ரீகாந்தன்9 January 2022 at 08:21

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஜெயராமன்9 January 2022 at 08:55

    மிக அருமை.

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்9 January 2022 at 08:55

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. True.
    Very Nice.
    As far as I concerned,
    we can feel presence of
    God within us,
    only while doing
    such help.��

    ReplyDelete
  5. Express Respect.

    ReplyDelete
  6. வணங்குகிறேன்.

    ReplyDelete
  7. மோகன்தாஸ். S9 January 2022 at 10:10

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கெங்கையா9 January 2022 at 11:04

    கவிதை மிக அருமை

    ReplyDelete
  9. அருமை.அவர்கள் மட்டுமே மனிதர்கள்

    ReplyDelete
  10. முரளி CVRDE9 January 2022 at 14:18

    அற்புதம்.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  11. சத்தியன்9 January 2022 at 14:19

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  12. ஸ்ரீராம்9 January 2022 at 18:10

    மிக உண்மை.

    ReplyDelete