எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 9 April 2022

*மறைக்கப்பட்டத் தவறு*

 


ஒத்துக் கொள்ளப்பட்டத்

தவறுக்கு அப்போதே

முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

பிரச்சனை சரியாகிறது.

அனைவரும் மகிழ்கிறார்கள்.

 

மறைக்கப்பட்டத் தவறு

யாரோ ஒருவரால்

கண்டுப்பிடிக்கப்படுகிறது.

வேறுத்தவறு நடக்கும்போதெல்லாம்

அதுவும் விவாதிக்கப்படுகிறது.

தவறு செய்தவர்

விவாதப் பொருளாகிறார்.

பலருக்கும் பரவுகிறது

அந்த நிகழ்வு.

காலமும், பொருளும்

விரயமாகிறது.

மனம் சோர்வாகிறது.

 

பிரச்சனையை எதிர்கொள்பவர்

சரியாகும் வரை

தூக்கம் வராமல் தவிப்பார்.

தவறை செய்தவரும்

எங்கே தனது தவறு

கண்டுப்பிடிக்கப்படுமோ..?

என எப்போதுமே

அமைதியை இழந்திருப்பார்..!

 

*கி.அற்புதராஜு*

10 comments:

  1. ஜெயராமன்9 April 2022 at 07:08

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்9 April 2022 at 07:13

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete
  3. நந்தகுமார்9 April 2022 at 07:16

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. லஷ்மிகாந்தன்9 April 2022 at 07:17

    உண்மை பதிவு சார்....

    ReplyDelete
  5. கெங்கையா9 April 2022 at 07:19

    கவிதை மிக மிக அருமை.

    ReplyDelete
  6. சத்தியன்9 April 2022 at 09:03

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. உண்மை அருமை

    ReplyDelete
  8. செல்லதுரை9 April 2022 at 20:46

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்10 April 2022 at 08:36

    மிக உண்மை

    ReplyDelete
  10. சிவபிரகாஷ்10 April 2022 at 09:57

    கவிதை அருமை.

    ReplyDelete