எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 11 April 2022

படித்ததில் பிடித்தவை (“காலத்தை என்ன செய்ய..?” – வண்ணநிலவன் கவிதை)


 

*காலத்தை என்ன செய்ய..?*

 

பேனாவைக் கைக்குட்டையைத்

தொலைப்பது போல் காலத்தைத்

தொலைக்க முடியவில்லை.

காலம் காட்டும் கடிகாரம்

காலம் பற்றி அறிந்ததில்லை.

 

பறப்பன, ஊர்வன, பஸ் ஸ்டாண்டில்

படுத்திருக்கும் பரமசாதுப் பசுக்கள்,

முகம் பார்க்கும் கண்ணாடிக் குருவிகள்

எதற்கும் காலம் பற்றிய

ஓர்மையில்லை; என்னைத் தவிர.

 

விழித்தாலும் உறங்கினாலும்

வீணே என்னுடனிருக்கும்

காலத்தை என்ன செய்ய..?

 

*வண்ணநிலவன்*






4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணநிலவன்
    (பிறப்பு: திசம்பர் 15, 1949)
    ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.
    தூத்துக்குடி மாவட்டம்,
    தாதன்குளம் என்னும்
    கிராமத்தில் பிறந்த
    இவரின் இயற்பெயர்
    உ. ராமச்சந்திரன்
    ஆகும்.
    இவர் பாளையங்கோட்டை,
    திருநெல்வேலி மற்றும்
    ஸ்ரீ வைகுண்டம் ஆகிய
    ஊர்களில் படித்தார்.
    ‘துக்ளக்’ பத்திரிகையிலும்
    பின்னர் ‘சுபமங்களா’
    பத்திரிகையிலும் ஆசிரியர்
    குழுவில் சிறிது காலம்
    வேலைப் பார்த்தார்.
    தமிழில் குறிப்பிடத்தகுந்த
    திரைப்படமான ருத்ரையாவின்
    ‘அவள் அப்படித்தான்’
    திரைப்படத்தின்
    வசனகர்த்தாவாகவும்
    பணியாற்றியுள்ளார்.
    இவர் நாவல், சிறுகதைகள்
    மற்றும் கவிதைகள்
    போன்றவற்றை எழுதி
    அவை நூல்களாக
    வெளி வந்திருக்கின்றன.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்11 April 2022 at 20:30

    மில்லியன் டாலர் கேள்வி!

    ReplyDelete
  3. சங்கர்11 April 2022 at 20:31

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்11 April 2022 at 20:33

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete