*யாருக்கு பெரிய மனசு?*
“விதவிதமா
சாமிக்கு
பூக்கட்டி விக்கும் பூமாரிக்கு…
ஒருமுழம்
பூ
தலையில்
ஏறாம
பார்த்துக்கிட்ட..
கடவுளுக்கு
தான்
எம்புட்டு
பெரிய மனசு..
ஆனாலும்
விடாம...
பூமாரி…
ஒருமுழம்
பூவ
சாமி
படத்தில வைச்சுட்டுத்தான்
வியாபாரத்தையே
தொடங்குறா..!”
*செ.புனிதஜோதி*
எதிர்பார்த்தல் இல்லா
ReplyDeleteஇறைநம்பிக்கை.