எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 22 April 2022

படித்ததில் பிடித்தவை (“மிச்சம் உள்ள ஆவி” – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை)

 


*மிச்சம் உள்ள ஆவி*

 

திருநெல்வேலி

டவுணில்

சந்திப்பிள்ளையார் முக்கின்

இடதுபுறம்

உள்ளடங்கி இருக்கும்

கல்லூர் பிள்ளைக் கடையில்

பின்னரவில்

பரிமாறப்படும்

இட்லியை விள்ளும்போது

ஆவி இப்போதும் வெளியேறுகிறது

இட்லியில் ஆவியைப் பார்த்து

ரொம்ப நாளாகி விட்டது

ஆவிகள் என்று சொன்னால்

அர்த்தம் விபரீதமாகி விடும்

இருந்தும்

திருநெல்வேலியின்

ஆவி

இட்லியில் மிச்சம் இருப்பதாகச்

சொல்லிக் கொள்ளலாம்..!

 

*ஷங்கர்ராமசுப்ரமணியன்*



6 comments:

  1. சங்கர்22 April 2022 at 08:27

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்22 April 2022 at 08:28

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகளும்,
    நன்றியும்.

    ReplyDelete
  3. கெங்கையா22 April 2022 at 10:24

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை22 April 2022 at 10:28

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்22 April 2022 at 15:02

    பராம்பரிய உணவகங்களே
    இன்னும் புராதன நகரங்களின்
    பெருமையை பறைசாற்றிக்
    கொண்டிருக்கின்றன.
    கவிதையின் கருத்து
    மிக அருமை.

    ReplyDelete