எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 14 April 2022

படித்ததில் பிடித்தவை (“காலம் சுழல்கிறது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*காலம் சுழல்கிறது*

 

அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.

இவர் பேசுவதில்லை.

மற்றவர் குறுஞ்செய்திகளும் குறைந்துபோனது.

இன்னொருவர் அன்பிரண்ட் செய்துவிட்டார்.

உள்ளேன் அய்யா என்பது போலிருந்த அன்பும்

ஓடி எங்கோ ஒளிந்துகொண்டது.

எதிர்படும் ஒருவர் தெருமாறிச் செல்கிறார்.

குற்றப்பத்திரிக்கை வாசிப்பவர்

மன்னிப்பைக் கடலில் எறிந்துவிட்டு வாக்கிங் போகிறார்.

சுவரெழுப்பிக்கொண்டவர்கள் கொஞ்சம் பேர்.

ஜன்னலில்லாத சுவர்கள் என்பது வருத்தமான தகவல்.

விஷேசங்களில் சந்தித்தால் உண்டு.

விஷேசங்களுக்கான அழைப்புகள் வருவது குறைந்துபோனது

அல்லது விஷேசங்கள் ரகசியமானது.

முகம் தெரியாதவர் புன்னகைக்கிறார்.

கடவுள் பிரார்த்தனையைக் கேட்டுக்கொண்டார்.

 

மற்றபடி காலம் சுழல்கிறது

இசைத்தட்டு போல.

அதில் எனக்கான இசையைக் கேட்டுக்கொள்கிறேன்.

குட்டிமழைக் கூப்பிடுகிறது.

புழுக்கத்தை ஆற்றிக்கொள்ளக் கொஞ்சம் போய்

நனைந்துவிட்டு வர வேண்டும்..!

 

*ராஜா சந்திரசேகர்*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சீனிவாசன்26 April 2022 at 11:15

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை26 April 2022 at 11:16

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்26 April 2022 at 11:17

    தனிமை ஒன்றே
    எக்காலத்துக்கும் துணை.

    ReplyDelete
  5. சத்தியன்26 April 2022 at 18:13

    இன்றைய நிதர்சன நிலை.
    🙏

    ReplyDelete
  6. கெங்கையா26 April 2022 at 18:13

    கவிதை மிக அருமை.

    ReplyDelete