எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 10 April 2022

படித்ததில் பிடித்தவை (“நீரின்றி அமையாது உலகு” – சுகுமாரன் கவிதை)


 

*நீரின்றி அமையாது உலகு*

 

ஒவ்வொரு உறவுக்கும்

ஒவ்வொரு திரவம்

தாய்மைக்கு முலைப்பால்

சகோதரத்துக்கு இரத்தம்

காதலுக்கு உமிழ்நீர்

தோழமைக்கு வியர்வை

துரோகத்துக்குக் கண்ணீர்

ஏனெனில்

நீரின்றி அமையாது உலகு..!

 

*சுகுமாரன்*




7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் நா.சுகுமாரன்*
    (பிறப்பு: ஜூன் 11, 1957;
    கோவை, தமிழ்நாடு)
    ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.
    கவிதை, மொழிபெயர்ப்பு,
    விமர்சனம், இதழியல்,
    தொலைக்காட்சியின்
    செய்தி ஆசிரியர்
    எனப் பல்வேறு
    பரிமாணங்களில் இவர்
    இயங்கிக்கொண்டிருக்கிறார்.

    சென்னை பல்கலைக்கழகத்தில்
    பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற
    சுகுமாரன்,
    அடூர் கோபாலகிருஷ்ணனின்
    சினிமா பற்றிய
    புத்தகமொன்றை
    (சினிமா அனுபவம்) தமிழில்
    மொழிபெயர்த்திருக்கிறார்.

    'காலச்சுவடு' பத்திரிகையின்
    பொறுப்பாசிரியராகப்
    பணியாற்றுகிறார்.

    இவர் எழுதிய
    கவிதைத் தொகுப்புகள் :

    கோடைக்காலக் குறிப்புகள்(1985)
    பயணியின் சங்கீதங்கள் (1991)
    சிலைகளின் காலம்(2000)
    வாழ்நிலம் (2002)
    பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

    கட்டுரைகள் :

    திசைகளும் தடங்களும் (2003)
    தனிமையின் வழி ( 2007)
    இழந்த பின்னும் இருக்கும்
    உலகம் (2008)
    வெளிச்சம் தனிமையானது (2008)

    ReplyDelete
  2. செல்லதுரை10 April 2022 at 08:37

    கவிதை செம...

    ReplyDelete
  3. ஸ்ரீராம்10 April 2022 at 08:38

    கவிஞரின்
    திரவங்களை
    உறவுகளுடன்
    இணைக்கும்
    கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  4. மோகன்தாஸ். S10 April 2022 at 10:00

    பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்10 April 2022 at 10:01

    Excellent.

    ReplyDelete
  6. சத்தியன்10 April 2022 at 12:18

    வணக்கங்கள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. வெங்கட்ராமன், ஆம்பூர்10 April 2022 at 17:19

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகளும், நன்றியும்.

    ReplyDelete