“அலுவலகம் செல்கையில்
மாற்றுத்திறனாளி
ஒருவர்
ரயில்
தண்டவாளத்தைக்கடக்க
உதவினேன்.
அன்று
முழுவதும்
அலுவலகத்தில்
மிகவும்
உற்சாகமானேன்.
மாலை
வீடு திரும்புகையில்
அதே மாற்றுத்திறனாளி
டாஸ்மாக்
கடைக்குள்
நுழைவதைப்
பார்த்தேன்.
ஏனோ...
இரவு
நெடுநேரம்
தூக்கம்
வராமல்
சங்கடத்துக்குள்ளானது
மனது..!”
*கி.அற்புதராஜு*
கவிதை நன்று.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துகளும், நன்றியும்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteஉறுத்தல்.
ReplyDeleteஒருவரின் சொந்த
ReplyDeleteஉணர்ச்சி நிலையை
வெளிப்படுத்துவது
மட்டுமல்லாமல்,
அனுதாபப்படவும்
வைக்கும் கவிதை.
எனக்கும்
ReplyDeleteஇது போன்ற
அனுபவம் உண்டு.
நான் உதவிய
பிச்சைக்காரன்
டாஸ்மாக் கடையிலிருந்து
வருவதை பார்த்த பின்
இப்போது நான்
யாருக்கும் உதவுவதேயில்லை.
அருமை.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteநம்முடைய மனநிலை
புற சூழ்நிலைகளில் கிடையாது.
அதை நாம் எப்படி
எடுத்துக் கொள்கிறோம்
என்பதில் உள்ளது.
அதுவே நம்முடைய சுபாவம்.
மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete