*முன்னால்*
“முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி
திரும்பிப் பார்க்க நேரும்
யாரும் வரவில்லை என்றால்
‘முன்னால்’ என்பதன்
புது அர்த்தம் புரியும்
புல்பூண்டற்ற வெட்டவெளியும்
வெயில் கொளுத்தும் வெட்டவானமும்
உன்னை என்ன செய்வதென்று
தவிக்கும்..!”
No comments:
Post a Comment