*நம்பிக்கை*
“பக்கத்தில் கண்டதும்
கூடுதலாய் நீந்திக் காட்டும்
மீன்கள்
நதிக்குள் விடத்தான்
கரங்கள் நீள்வதாக
நம்புகின்றன
விலை பேசி வாங்கி
வீட்டுக்குள் நுழையும் வரை..!”
*ந.சிவநேசன்*
No comments:
Post a Comment