எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 1 July 2021

படித்ததில் பிடித்தவை (“யாதுமாகியவள்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*யாதுமாகியவள்

 

காவல்காரியாய் சில நேரம்.

எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்

புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்.

 

எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்

வழக்கறிஞராய் சில நேரம்.

 

எங்கள் பிணக்குகளை விசாரித்து

தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்.

 

பல வேடம் போடும் அம்மா

எப்போதும் வீட்டுச் சிறையில்

கைதியாய்..!

 

 

*சேயோன் யாழ்வேந்தன்*



7 comments:

  1. செல்லதுரை1 July 2021 at 06:48

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J1 July 2021 at 06:49

    அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா1 July 2021 at 06:51

    உலகில் அம்மாவுக்கு
    நிகர் ஏதுமில்லை.
    கவிதை அருமை.
    உண்மை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்1 July 2021 at 08:40

    அது வீட்டுச் சிறை
    இல்லை.
    தன் குடும்பத்திற்கான
    எதிர்பார்ப்பில்லா
    அர்பணிப்பு.

    ReplyDelete
  5. சங்கர்1 July 2021 at 08:42

    Real Facts.
    Superb.

    ReplyDelete
  6. ஹரிகுமார்1 July 2021 at 08:42

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. கலக்கல் கந்தசாமி1 July 2021 at 09:01

    நன்று.

    ReplyDelete