எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 2 July 2021

படித்ததில் பிடித்தவை (“மகளின் கட்டளைகள்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மகளின் கட்டளைகள்*

 

விடுமுறைக்கு

ஊருக்கு வந்த மகள்

அப்பாவை போனில் கூப்பிட்டு

உரக்கச் சொன்னாள்.

 

அப்பா நான் வர்ற வரைக்கும்

மீன் தொட்டி மீன்கள

கவனமாப் பாத்துக்குங்க.

அதுங்ககிட்ட

அடிக்கடி பேச்சுக்குடுங்க.

 

பால்கனிச் செடிக்குத்

தண்ணி ஊத்துங்க.

 

படிக்கட்டு பக்கம்

வர்ற அணிலுக்கு

தானியம் போடுங்க.

 

மாடியில வந்து

உட்கார்ற காக்காவுக்கு

சோறு வைங்க.

பாக்காம விட்றாதிங்க.

 

நாய்க்குட்டிய

வாக்கிங் கூட்டிட்டுப் போங்க.

கொஞ்சம் தூரமாப்பா

சின்னதா சுத்திட்டு வரவேணாம்.

 

அப்புறம் ஜன்னலோரத்துல

வந்து உட்கார்ற புறா

அதுவா பறந்து போயிடும்.

விரட்டி விட்றாதிங்க.

 

என் டேபிள் மேல

ஒரு யானை

வரைஞ்சி வச்சிருக்கேன்.

அத எடுத்து

பத்திரமா உள்ள வைங்க.

யானைக்கு ஒரு பேரும்

யோசிச்சு வைங்க.

 

எல்லாவற்றையும்

பொறுமையாகக்

கேட்டுக்கொண்ட அப்பா

மெல்ல

மகளின் வனத்திற்கு

காவலாளியாக

மாறத் தொடங்கினார்.

 

*ராஜா சந்திரசேகர்*

{கல்கி இதழில் (20.11.2011)

வெளியான கவிதை}



9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஜெயராமன்2 July 2021 at 06:40

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்2 July 2021 at 06:51

    Excellent.

    All are having
    thier own commitments,
    once we born in this
    earth.
    We have to value them.
    This is only shows
    our true love with them.

    ReplyDelete
  4. செல்லதுரை2 July 2021 at 07:28

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்2 July 2021 at 07:29

    மிக அருமை.
    பெண் குழந்தைகளைப்
    பெற்ற பாக்கியசாலிகளான
    அப்பாக்களுக்கு மட்டுமே
    வாய்ந்த இனிய அனுபவங்கள்.

    ReplyDelete
  6. நந்தகுமார்2 July 2021 at 08:39

    அருமை.

    ReplyDelete
  7. பாலமுரளி3 July 2021 at 14:09

    மகள் எல்லோருடைய
    வீட்டிலும் மனதிலும்
    எப்பொழுதுமே சிறப்பு.

    ReplyDelete
  8. வெங்கடபதி5 July 2021 at 09:32

    கவிதை அருமை.

    ReplyDelete
  9. லதா இளங்கோ10 July 2021 at 17:31

    கவிதை அருமை.

    ReplyDelete