எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 15 July 2021

படித்ததில் பிடித்தவை (“முடியாமல்” – கல்யாண்ஜி கவிதை)

 


*முடியாமல்*  

 

மலைகள் ஏன்

அத்தனை தொலைவில் இருக்கின்றன

அடைய முடியாமல்..?

 

சுவர்கள் ஏன்

இத்தனை அருகில் இருக்கின்றன

விலக முடியாமல்..?

 

*கல்யாண்ஜி*




3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்15 July 2021 at 12:50

    எப்பொழுதும்
    இலக்கு
    தூரத்திலும்,
    தடைகள்
    மிக அருகில்
    இருப்பது
    இயல்புதான்.

    ReplyDelete
  3. சீனிவாசன்15 July 2021 at 12:51

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete