எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 18 July 2021

*துயரம்*

 


எப்படி நிகழ்ந்தது

என்றும் தெரியவில்லை...

அதன் இழப்புக்கு

நான்தான் காரணமா?

என்றும் தெரியவில்லை...

ஒவ்வொரு நாளும்

இரவு வாசல் கதவை

அடைக்கும் போதெல்லாம்

துயரப்பட வைக்கிறது...

 

உள்பக்க கதவிலிருந்து

சுவரில் ஓடுகின்ற

வால் இல்லாத பல்லி..!

 

*கி.அற்புதராஜு*


6 comments:

  1. அறிவழகன்18 July 2021 at 07:07

    நன்று.

    ReplyDelete
  2. சத்தியன்18 July 2021 at 08:07

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சீனிவாசன்18 July 2021 at 08:09

    ஒவ்வொரு முறையும்
    கதவு மற்றும் ஜன்னல்
    மூடும்போது எனக்கும்
    அந்த அக்கறை உண்டு.
    "வலி என்பது அனைத்து
    உயிர்களுக்கும் பொதுவானது".

    ReplyDelete
  4. Dr. Ramya Avinash18 July 2021 at 08:10

    Nice Mama.

    ReplyDelete
  5. பிருந்தா18 July 2021 at 13:36

    அருமை.

    நம்மால் மற்றவர்களுக்கு
    எந்தவிதமான துன்பங்களும்
    ஏற்படாமல் இருக்க
    முயற்சிப்பது எத்தனை
    சுகமான விஷயம்.

    ReplyDelete
  6. கவிதா ராணி18 July 2021 at 19:47

    நாம்தான் கவனக்குறைவாக
    தவறிழைத்து விட்டோமோ
    என அந்த பாதிக்கப்பட்ட
    வாயில்லாத ஜீவன்
    கண்ணில் படும்போதெல்லாம்
    கவலைக்கொள்வது...
    மனதைக் கணக்க வைக்கிறது.

    ReplyDelete