எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 12 July 2021

படித்ததில் பிடித்தவை (“இறைவனும்... நானும்...” – கமலநாதன் கவிதை)


 

*இறைவனும்... நானும்...*

 

உனக்கு

வேண்டுவது

யாதென..?

ஒருநாள் இறைவன்

கேட்டான்.

 

து வேண்டும்?

என்று கேட்டவுடன்

நீண்ட பட்டியல்

நினைவிற்கு

வந்தாலும்

மனதென்னவோ

சற்று நேரம்

அமைதி காத்தது.

 

எல்லாம் நீயே..!

என்கின்ற போது

ஏனய்யா

இத்தனை துன்பங்கள்..?

என்றே

இறுதியில்

கேட்கத்

துணிந்தேன்.

 

உன்னிடம்

பணம் இல்லை

என்றால்

என் செய்வாய்..?

எதிர் கேள்வியை

இறைவன்

கேட்டான்.

 

இதென்ன கேள்வி..?

பணம் தேடும்

வழியைப் பார்ப்பேன்

என்றேன்.

 

நீ சந்திக்கும்

துன்பங்களும்

அப்படியே.

 

துன்பம்

வரும் வேளையில் தான்

மீள்வதற்கு

வழி தேடுவாய்.

 

தேடலே

முன்னேறும்

பாதை.

 

உன் தேடலே முன்னேற்றும்

உன்னையும்

உலகையும் என்றான்.

 

அப்போது

நீ எதற்கு..?

என்றேன்.

 

உன்னுள்ளிருந்து

துன்பத்தை

அனுபவிப்பதும்

அதன் தீர்வு நோக்கி

உன்னைச் செலுத்துவதும்

நானே..!

என்றான் இறைவன்.

 

*கமலநாதன்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கமலநாதன்*
    அவர்கள் தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 1980ல்
    உதவிப் பொறியாளராக
    சேர்ந்து, 2015ல்
    மேற்பார்வைப் பொறியாளராக
    பணி ஓய்வு பெற்றவர்.

    தற்போது இருப்பது
    அவரது சொந்த ஊரான
    சேலத்தில்.

    தமிழார்வம் அவரது
    கல்லூரி காலத்தில்
    தொடங்கி இன்று வரை
    தொடர்கிறது.

    அவரது கவிதைகள்
    அனைத்தும்
    அவரது உணர்வின்
    வெளிப்பாடு.

    அவ்வப்போது எழுதும்
    அவரது கவிதைகள்
    எதையும் அவர் இதுவரை
    தொகுத்து வைக்கவில்லை.

    அவரது கவிதையில்
    அவருக்குப் பிடித்த வரிகள்:

    "சுமப்பதின் வலி
    அறிவேன்.
    அதனால்
    என் நினைவுகளும்
    கூட
    எவர் மனதிலும்
    சுமையாயிருக்க
    நான்
    விரும்புவதில்லை."

    ReplyDelete
  2. ஸ்ரீராம்12 July 2021 at 08:08

    மிக அருமை.
    கவிஞர் கண்ணதாசனின்
    "பிறப்பில் உள்ளது
    யாதெனக் கேட்டேன்"
    என்ற அற்புதக் கவிதை
    நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  3. செந்தில்குமார். J12 July 2021 at 08:09

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா12 July 2021 at 09:26

    கமலநாதன் கவிதை
    அருமையுலும் அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தன்12 July 2021 at 20:57

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. சிவபிரகாஷ்13 July 2021 at 10:22

    உன்னுள் துன்பத்தை
    அனுபவிப்பதும்...
    வித்தியாசமான வரிகள்.

    ReplyDelete