எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 11 July 2021

படித்ததில் பிடித்தவை (“காற்றில் பறந்த கடிதம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*காற்றில் பறந்த கடிதம்*

 

தற்கொலைக் கடிதம் எழுதிய அவன்

மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான்.

சில பிழைகளைத் திருத்தினான்.

அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான்.

கடந்து வந்த ரணங்களை

எழுத்து கடத்தி இருப்பது குறித்து யோசித்தான்.

இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற

பாதை வரைபடம் தன்னுள் அவனைப் பார்க்க வைத்தது.

நாமா இப்படி எழுதி இருக்கிறோம் என ஆச்சர்யப்பட்டுப்

பேனாவை இறுக்கப்பிடித்தான்.

சிந்திய மைத்துளிகள் பறப்பது போல் உணர்ந்தான்.

உராய்வுகளுக்கு உயிரிழப்பா முடிவு என

அவன் எழுதாத ஒரு வரி வந்து

மூளையில் தட்டியது.

இருத்தல் என்பது வாழ்ந்து தீர்ப்பதல்ல

வாழ்ந்து பார்ப்பது

அவனுள் எதிரொலித்தது.

என்னைக் கொன்று போட

நான் யார்

இந்த ஒலி அவனைச் சுற்றி வந்தது.

இப்படிக்கு இறக்கத்துடிக்கும் ஒருவன்

என்ற வரியை

மாற்றி எழுதினான்.

ஏழாவது மாடியிலிருந்து

அந்தக் கடிதம்

பறவையைப் போல்

போய்க்கொண்டிருந்தது.

இப்படிக்கு

வாழ விரும்பும் ஒருவன் என

அது முடிந்திருந்தது.

அவன் படிகளில்

இறங்கிப்போய்க்கொண்டிருந்தான்..!

 

*ராஜா சந்திரசேகர்*




11 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. கமலநாதன்11 July 2021 at 16:52

    மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. கமலநாதன்11 July 2021 at 19:46

      மிகவும் பிடித்த
      கவிஞர்களில்
      ஒருவராகி விட்டார்
      ராஜா சந்திரசேகர்.
      அதுவும் இக் கவிதை
      மிகவும் யதார்த்தமாக
      மனதைத் தொட்டது.

      பகிர்வுக்கு மிக்க
      நன்றி.

      Delete
    2. ஆம்...
      கவிஞர் ராஜா சந்திரசேகர்
      கவிதைகளால் எல்லோருடைய
      மனதையும் கவர்ந்து விட்டார்.

      Delete
  3. சத்தியன்11 July 2021 at 18:34

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. கெங்கையா11 July 2021 at 18:35

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்11 July 2021 at 18:37

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. ஹரிகுமார்11 July 2021 at 19:43

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. சுப்புலெஷ்மி11 July 2021 at 19:44

    நன்று.

    ReplyDelete
  8. ஸ்ரீராம்12 July 2021 at 06:14

    எந்த முடிவையும்
    எடுக்கு முன்
    ஒருக்கணம்
    அவசரமில்லாமல்
    யோசித்தால்
    தெளிவு பிறக்கும்
    என்பதை மிக அழகாக
    விளக்குகிறார் கவிஞர்
    கவிதையில்.

    ReplyDelete
  9. லதா இளங்கோ14 July 2021 at 17:12

    New beginnings.

    ReplyDelete