“புதுமலர்
அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு..!
சதிராடும்
நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி
மதியல்ல
முகம் அவட்கு
வறள்நிலம்..! குழிகள் கண்கள்..!
எது
எனக்கின்பம் நல்கும்..?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே..!”
*புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்*
{குடும்ப விளக்கு}
ஒருவனும் ஒருத்தியும்
அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல்
வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல்
வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.
முதியவளின் உடலில்
பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல்
மாறவில்லை. இதற்கு அடிப்படை அவரது உள்ளத்தில் நிறைந்து விளங்கும் உண்மை அன்பு
ஆகும்.
முதியவளின் உடம்பு
புதுமலர் போல் ஒளியுடன் இல்லை; காய்ந்து போன புல்கட்டைப் போன்று இருக்கிறது. அவள் நடப்பது
நடனத்தைப் போல் அழகாக இல்லை; தள்ளாடி விழுவதுபோல் இருக்கிறது. நிலவு போல் அவள் முகத்தில் ஒளி
இல்லை; வறண்டு
இருக்கிறது. கண்கள் குழிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட முதியவளின் உடலில்
எனக்கு இன்பத்தைத் தருவது எது? இன்றும் உயிருடன் இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத்
தருவது ஆகும் என்று முதியவர் கூறுவது போல் பாரதிதாசன் பாடியுள்ள பாடல் உண்மைக்
காதல் என்பது உயிர் இருக்கும் வரை தொடரும் வலிமை உடையது என்பதை உணர்த்துகிறது
அல்லவா?
**** **** **** ****
கவிதை அருமை.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
கவிதை மிக அருமை.
ReplyDeleteபாவேந்தரின் கவிதைகளும்,
ReplyDeleteதமிழ் ஆளூமையும்
தமிழ் இலக்கியத்தில்
நீங்கா இடத்தை
பிடித்திருப்பவை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteபாசத்தையும், நன்றியையும்
ReplyDeleteவெளிப்படுத்துகிறது.