*யாரோ
தொலைத்த குழந்தை*
“யாரோ தொலைத்த குழந்தை
என்னிடம்
கிடைத்த
கொஞ்ச
நேரத்தில்
அன்பாகி
இருந்தது.
கதை
கேட்டது.
கைதட்டிச்
சிரித்தது.
பலூன்
உடைத்தது.
பெயர்
சொன்னது.
கட்டிப்
பிடித்துக் கொண்டது.
என்னையும்
குழந்தையாக்கியது.
தொலைத்தவர்களை
கண்டுபிடித்து
குழந்தையைத்
தர
நிம்மதியும்
சந்தோஷமும் சேர
கையெடுத்துக்
கும்பிட்டுப் போயினர்.
மறுபடி
குழந்தை
தொலைந்து போனது
என்னிடமிருந்து..!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை அருமை.
Expresses happiness and warm,
ReplyDeletepositive feelings.
கவிதை மிகவும் அருமை.
ReplyDeleteஒரு நல்ல கவிதையைப்
ReplyDeleteபதிவிட்டதற்கு நன்றி..!
அருமை
ReplyDeleteஎன்னை குழந்தை ஆக்கியது...
ReplyDeleteஅருமையான கவிதை..!
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளுடன்
ReplyDeleteசெலவிடும் பொழுதுகள்
எல்லாம் இனிய
நினைவுகளாய் நெஞ்சை
நிரப்புபவை.
அருமை
ReplyDeleteஇறுதிப் பகுதி
நெஞ்சைத் தொட்டது.
மூன்றாம் பிறை
திரைப்படத்தை
நினைவூட்டியது
இக் கவிதை.