*நா.முத்துக்குமார்* (12 சூலை 1975-14 ஆகஸ்ட் 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 'பல்லேலக்கா', 'என் காதல் சொல்ல', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகியவை இவரின் திரையிசை பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.
*வாழ்க்கை*
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் தேதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.
*மறைவு*
ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.
*இவரது நூல்கள்*
1. நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு) 2. கிராமம் நகரம் மாநகரம் 3. பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு) 4. ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்) 5. என்னை சந்திக்க கனவில் வராதே 6. சில்க் சிட்டி (நாவல்) 7. பால காண்டம் (கட்டுரைகள்) 8. குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ) 9. வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்) 10. தூசிகள் (கவிதைகள்) 11. அணிலாடும் முன்றில்… l (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)
*விருதுகள்*
2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது.
2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*நா.முத்துக்குமார்*
(12 சூலை 1975-14 ஆகஸ்ட் 2016),
தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்
திரைப்படப் பாடலாசிரியரும்
கவிஞரும் ஆவார்.
'பல்லேலக்கா',
'என் காதல் சொல்ல',
'ஒரு கல் ஒரு கண்ணாடி'
ஆகியவை இவரின்
திரையிசை பாடல்களுள் சில.
தங்க மீன்கள், சைவம்
திரைப்படப் பாடல்களுக்காக
தேசிய விருது வாங்கினார்.
*வாழ்க்கை*
காஞ்சிபுரம் மாவட்டத்தில்
உள்ள கன்னிகாபுரத்தைச்
சேர்ந்தவர் இவர்.
நான்கு வயதில் தாயை
இழந்தவர்.
சிறு வயதில் இருந்தே
புத்தகங்களை உலகமாகக்
கொண்டார்.
தொடக்கத்தில் இயக்குனராகப்
பணியாற்ற விரும்பி இயக்குனர்
பாலுமகேந்திராவிடம் நான்கு
ஆண்டுகள் பணி செய்தார்.
இயக்குனர் சீமானின் வீர நடை
என்ற படத்தில் பாடல் எழுதினார்.
கிரீடம் (2007) மற்றும் வாரணம்
ஆயிரம் (2008) போன்ற சில
படங்களுக்கு வசனம் எழுதினார்.
இதுவரை கிட்டதட்ட 1500
பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள
இவர், 2016 வரை தமிழ்த்
திரையுலகின் முன்னணி
பாடலாசிரியராக இருந்தார்.
“பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற
பெயரில் பதிப்பகம் தொடங்கி
நடத்தினார்.
இவர் 2006 ஆண்டு ஆணி மாதம்
14 ஆம் தேதி, வடபழனியிலுள்ள
தீபலஷ்மி என்பவரை திருமணம்
செய்தார்.
இவர்களுக்கு ஆதவன் என்ற
மகனும் யோகலக்சுமி என்ற
மகளும் உள்ளார்.
*மறைவு*
ஆகஸ்ட் 14, 2016 காலையில்
தனது 41வது வயதில்
காலமானார்.
மஞ்சள்காமாலையால்
பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய
நிலையில் இறந்தார்.
*இவரது நூல்கள்*
1. நியூட்டனின் மூன்றாம் விதி
(கவிதைத் தொகுப்பு)
2. கிராமம் நகரம் மாநகரம்
3. பட்டாம்பூச்சி விற்பவன்
(கவிதைத் தொகுப்பு)
4. ஆணா ஆவண்ணா
(கட்டுரைகள்)
5. என்னை சந்திக்க கனவில்
வராதே
6. சில்க் சிட்டி (நாவல்)
7. பால காண்டம் (கட்டுரைகள்)
8. குழந்தைகள் நிறைந்த வீடு
(ஹைக்கூ)
9. வேடிக்கை பார்ப்பவன்
(கட்டுரைகள்)
10. தூசிகள் (கவிதைகள்)
11. அணிலாடும் முன்றில்… l
(உறவுகள் குறித்து ஆனந்த
விகடனில் வெளிவந்த தொடர்)
*விருதுகள்*
2005: கஜினி திரைப்படத்திற்காக
தமிழக அரசின் சிறந்த
பாடலாசிரியர் விருது.
2006: வெயில் திரைப்படத்திகாக
பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர்
விருது.
2009: அயன் திரைப்படத்திற்காக
பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர்
விருது.
2013: தங்க மீன்கள் படத்தில்
"ஆனந்த யாழை மீட்டுகிறாய்"
பாடலுக்கு, சிறந்த பாடல்
வரிகளுக்கான தேசிய விருது.
2014: சைவம் திரைப்படத்தில்
"அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த
பாடல் வரிகளுக்கான தேசிய
விருது.
மிக அருமை.
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteஅருமை.
ReplyDelete