*நட்பும் வரிகளும்*
“அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம்
பேசுவோம்
என்றார்
ஒரு நண்பர்
இம்முறையும்.
பிறகு
பார்க்கலாம் என
அலைபேசியை
அணைத்தாள்
ஒரு
தோழி.
கடிதப்
போக்குவரத்தை
நிறுத்திவிட்ட
நண்பர்
ஈமெயிலில்
தென்படுவதும்
குறைந்து
போயிற்று.
கோயிலில்
பழக்கமான புது நண்பர்
பக்தி
பரவசத்தில்
சில
வார்த்தைகளோடு
சென்று
விடுகிறார்.
தொலைகாட்சியில்
செய்தி வாசிக்கும்
நண்பனின்
புன்னகையை
செய்தி
முடியும் நேரத்தில்
அரிதாகப்
பார்க்க முடிகிறது.
குவிந்து
கிடக்கின்றன மனதில்
நட்பும்
வரிகளும்.
தனிமையோடு
நடக்கிறது
கபடி
விளையாட்டு.
யார்
மீதும்
வருத்தம்
வைக்க
விரும்பவில்லை.
எப்போதும்
போல்
நிதானமாய்ப்
பார்த்து
தலை
அசைத்து
நலம்
விசாரிக்கிறது
பால்கனி
செடி.
இப்போது
அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ..!”
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteநடப்புலகம் நிதர்சனம்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteClassic....👌
ReplyDelete👌👌👌
ReplyDeleteஅருமை. நேரமின்மை அவசர உலகம்
ReplyDelete🙏
ReplyDeleteவாழ்வின் ஒரு கட்டத்தில்
ReplyDeleteநகமும், சதையுமாக
மனிதர்களின் நட்பை விட
சூழ்ந்திருக்கும் இயற்கையே
சாசுவதமான எதிர்பார்ப்பில்லாத
நட்பு.