*நினைவாக பயணிக்கின்றன*
“இருபுறக் காடுகள் ஊடாக
என்னைக்
கொண்டோடுகிறது ரயில்.
அந்நிய
நாட்டின் வெறுமையை
இன்னும்
இன்னும் உணரும் சலிப்பாக
இப்பயணம்.
என்
நீண்ட தனிமையில்
இடையிட்டு
சற்றுத்
தள்ளி ஒருவன்
கதவருகில்
நின்று
கடந்தோடும்
மரங்களை பார்க்கிறான்.
இருக்கையின்
சலிப்பில்
கதவருகே
நானும் சென்றேன்.
மரங்கள்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
‘நீங்க தமிழா..?’ நான் கேட்க
இங்லீஷில்
பேசினான்.
கொல்கத்தா
நகரிலிருந்து
கொம்பியூட்டர்
வேலைக்கு வந்தானாம்.
சில
நிமிடங்களில்
பிராங்போர்ட்
சென்றடைய
‘இதோ இறங்குமிடம்
உன்னை
முத்தமிட்டுப் பிரியலாமா..?’
கேட்டான்.
மறுப்பதற்கு
அவனோடு
எனக்கென்ன கோபம்..?
அவனது
ஆடைகளின் நிறங் கூட ஞாபகத்திலில்லை.
முகம்
மறந்து விட்டது.
பெயர்
கேட்டறியவில்லை.
இரு
முத்தங்கள் மட்டும்
அத்தருணத்தின்
நினைவாக
என்னோடு
பயணிக்கின்றன..!”
*தர்மினி*
{இலங்கை பெண்களின் கவிதை}
மிக அருமை.
ReplyDelete👌👍
ReplyDeleteஅருமை.
ReplyDelete