“ஓடும் ரயிலில்
ஒரு வண்ணத்துப்பூச்சி.
பறக்க இயலாமல்
நடைப்பாதையின் நடுவில்
ஊர்ந்து செல்கிறது.
இடை இடையே
சிறகை விரித்து
பறக்க முயற்சிக்கிறது
ஏனோ முடியவில்லை.
நல்ல வேலை
ரயிலில் கூட்டமில்லை.
பயணிகளின் காலில்
மிதி படாமல்
தப்பிக்க வேண்டும்.
அடுத்த ஸ்டேஷனில்
பயணிப்பவர்கள் ஏறுவதற்குள்
வேகமாக காற்றடித்தால்
வெளியே சென்றுவிடும்.
வேகமான காற்று வேண்டுமென
வேண்டிக் கொள்கிறேன்.
இறக்கையைப் பிடித்து
வெளியேப் போட்டிருக்கலாம்...
சிறுவயதில்
வண்ணத்துப்பூச்சியை
பிடிக்க முயற்சித்து
இறக்கை கையில்
ஒட்டிக் கொண்டதாக ஞாபகம்;
முயற்சிக்கவில்லை.
அடுத்த ஸ்டேஷனுக்குள்
நுழைய தொடங்கும் ரயில்.
அவசர அவசரமாக
ஏறும் வழியின் மின்விசிறியை
இயங்க வைக்கிறேன்.
அதன் பெருங்காற்றில்
வெளியே தள்ளப்படுகிறது
வண்ணத்துப்பூச்சி.
படப்படத்த மனது இதமாகிறது.
இரு வார வாழ்நாளில்
இன்னும் எத்தனை நாட்களோ..?
வாழட்டும் மகிழ்வுடன்..!”
*கி.அற்புதராஜு*
👍💐
ReplyDeleteExcellent. 💐💐🌹
ReplyDelete👌👌💐💐🙏🏻🙏🏻
ReplyDeleteமனதைத் தொட்ட
ReplyDeleteஇறக்கைகள்
அற்புத(ம்)ராஜ்.
💖
🙏
ReplyDeleteஅற்புதம் அண்ணா.
ReplyDelete🙏
ReplyDeleteவண்ணத்துப்பூச்சி
ReplyDeleteஇரு வாரங்கள்தான்
உயிர் வாழுமா?
பாவம்.
வண்ணத்துப்பூச்சியை
ReplyDeleteபிடிக்க முயற்சித்து
அதன் சிறகுகளை
சேதப்படுத்திய
சிறு வயது நினைவுகள்
என்னையும் சோகத்தில்
ஆழ்த்தியது.
எனக்கும் அந்த
அனுபவம் உண்டு.
😔😔
கவிதை அருமை.
👌👌
Beauty is a
ReplyDeleteshort lived reign.
வண்ணத்து பூச்சியை
ReplyDeleteவாழவைக்க
கவிஞரின் பரிதவிப்பு
போற்றுதலுக்குரியது.
🥰🥰🥰
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete