*கையாள்வது சுலபம்*
“ஒரு அதட்டல் போதும் -
கை
கட்டவும், வாய் பொத்தவும் வைக்க.
‘நம்ம வேற அவன் வேற’ என்ற
ஒரு
வாக்கியம் போதும் –
பகையை
விதைத்து விட.
‘சாஸ்திரம் என்ன
சொல்லுதுன்னா’ என்ற
ஒரு
தொடக்கம் போதும் –
அடிமைச்
சங்கிலியை முறுக்கிக் கட்ட.
மனிதர்களை
கையாள்வது சுலபம்.
கூச்சலிட்டால்
போதும்.
பழமைவாதம்
கொடி கட்டிப் பறப்பது
இப்படித்தான்..!”
*ச.மாடசாமி*
No comments:
Post a Comment