*அனாதை*
“பெரும் மோதல்கள்
யுத்த
பிரகடனங்கள்
குரைப்புகளுக்கிடையே
ஒரு
நாய்
தன்
குட்டியை
தரையில்
இட்டுவிடுகிறது
நேற்றோ
முந்தைய
தினமோ
பிறந்த
அது
தன்
குட்டி குண்டு பாதங்களால்
நடைபயிலத்
தொடங்குகிறது
புலியாக
பன்றியாக
பூனையாக
குதிரையாக
அது
பயிலத் தொடங்கி
எல்லாரையும்
உள்ளே சேர்த்துக் கொண்டு
அந்தக்
குட்டி
ஒரு
நாயாக வேண்டும்
அதை
நானும் நீங்களும் அனுமதிக்க வேண்டும்
அதுவரையில்
நிர்க்கதியின்
குருட்டுச் சந்தில் நின்றுகொண்டு
அந்த
அம்மா
தரையில்
விழுந்து விட்ட
தன்
குட்டியின்
வால்
தொடங்கும் கணுவில்
நாக்கால்
நக்கிக்
கொடுக்கும் போது
அம்மா
அந்தக்
குழந்தையுடன்
சேர்ந்து
நானும்
அனாதை ஆகிவிடுகிறேன்..!”
*ஷங்கர்ராமசுப்ரமணியன்*
மனம் இளகியது. இரக்கம் கொள்வோம்.எல்லா உயிரிடத்தும்
ReplyDelete👌🌹
ReplyDeleteவாழு!
ReplyDeleteவாழ விடு!
💖
ReplyDeleteஅருமை.
ReplyDelete