“குறுகியப் பாதையில்
எதிர்
எதிரே வரும் இருவர்.
இருவரும்
எதிர்கொள்ளும்
சிறிய
தூரத்திலிருந்தே
ஒரே
நேரத்தில்
வலப்புறம்
எதிர் எதிரே...
இடப்புறம்
எதிர் எதிரே...
என்று
கடக்கும் திசையை
ஒரே
மாதிரியாக
தீர்மானிக்கிறார்கள்.
கடைசியில்
ஒருவர்
மட்டும்
ஒரே
இடத்தில் நின்று,
‘நீங்க போங்க...’
என்று
செல்லும் போது
இருவருக்குள்ளும்
பொங்கும்
சிரிப்பு
அவ்வளவு
அழகு..!”
*கி.அற்புதராஜு*
விட்டுக் கொடுத்து மகிழ்வோம்
ReplyDeleteவிட்டு கொடுப்பதிலும் மகிழ்ச்சி தான்
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete👍👌
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
விட்டுக் கொடுத்தல்
ReplyDeleteஎன்றும் ஆனந்தமே!
இக்கவிதையில்
ReplyDeleteவிட்டுக் கொடுத்தலை விட
இருவரும் ஓரே திசையில்
கடக்க முயற்சிக்கும் நிலை
எல்லோரும் சந்திப்பதுதான்.
அதை அழகாக
சித்தரிக்கிறது கவிதை.
அருமை.
அருமை.
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete