*சோதனைக்குழந்தை*
“தள்ளிப்போன மாதவிடாய்
கருவென்றே
பகிரவேண்டும்.
மனுகொடுத்த
இறைவன்
கண்திறந்துப்
பார்க்க
கண்ணையும்
தருவதாய்
வேண்டுதல்
வைக்கிறாள்.
உயிர்துளியும்
கருமுட்டையும்
தழுவலின்றி
தாமதமாகும்
குழந்தைப்பேற்றில்.
சமூக
குடைச்சலில்
இரு
ஜீவனின் உள்ளூர ஓலமும்
சத்தமின்றி
பூக்கும் கண்ணீரும்
எவரும்
புரிந்துக்கொள்ளாதப் பக்கங்களாய்.
வாரிசு... வாரிசு...
சத்தம்
அவளுக்குள்
இறங்கும்
கத்திக்குத்து.
சோதனைக்குழாய்
குழந்தை
பெற
பரிசோதனை எலியாய்
வலியோடும்
படுத்துக்கிடக்கிறாள்
மழலையின்
சங்கீதராகத்திற்காக.
வராத
மோகனத்தின்
வற்புறுத்தலில்
உயிர்துளி
சேகரித்துத்
தருகிறான் மருத்துவமனையில்.
கருப்பைக்குழாயில்
உயிரோடு
சூடுவைக்கும் உயிரற்றகருவிகளின் குடைச்சலால் புண்ணாகிக்கிடக்கிறாள்.
கால்களைத்
தூக்கி கட்டியதில்
மூச்சடைத்து
முன்னூறுப்பிள்ளைகளைப்
பெற்ற
பிரசவ
வலியை உணர்கிறாள்.
விழிகரையில்
எழுதுகிறது கண்ணீர்.
நம்பிக்கையின்
நடைப்பயிற்சியில்
தொடருது
இவ்வண்ணம்..!”
*செ.புனிதஜோதி*
Poetic Science.
ReplyDeleteகவிதையைப்
ReplyDeleteபடித்தவுடன்
மனம் கனத்தது.
கம்பி மேல்
நடப்பது போல்
கவனமாக
வார்த்தைகளைக்
கோர்த்து
கவிதையாக்கி
இருக்கிறீர்கள்.
எவரிடமும்
பகிர்ந்து கொள்ள
இயலாத வலி இது.
என் உறவுப்
பெண் ஒருவர்
ஒரு தந்தையின்
இடத்தில் என்னை
வைத்து இதைக்
கூறும் போது
கூறிய வலியும்
வேதனையும்
உங்கள் கவிதையைப்
படிக்கும் போது
கண் முன்னே
விரிந்தது.
விழிகரையில்
கண்ணீர்
நம்பிக்கையின்
நடைபயிற்சியில்
தொடருது
இவ் வண்ணம்...
கவிதையின்
இறுதி வரிகள்
குழந்தையின்மையின்
தொடர் வலியைக்
காட்டுகின்றன..
ஒரு சிறந்த
கவிஞராகப்
பரிணமிக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை அண்ணா.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteவாரிசை ஈன்றெடுக்க
தாய் சுமக்கும் வலிகளை
வேதனையோடு கவிதையில்
வடித்திருக்கிறார் கவிஞர்.
கவிதை அருமை.
ReplyDeleteமிக அருமையான கவிதை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
அருமை வாழ்த்துக்கள்.
ReplyDelete