*அமுதா எனும் தேவதை*
“சொர்க்கத்திலிருந்து
தங்கை
அமுதா போன் செய்தாள்.
அண்ணா
எப்பிடி இருக்க..?
கொரோனா
எப்படி இருக்கு..?
எல்லாரும்
நல்லா இருக்காங்களா..?
நல்லவேளை
அம்மா அப்பா
எதுவும்
சிரமப்படாம
என்கிட்ட
வந்து சேர்ந்துட்டாங்க.
பாண்டிச்சேரிக்குப்
போனால்
தன்
மகள்களைப்
பார்த்துவரச்
சொன்னாள்.
அவர்கிட்டயும்
அடிக்கடிப் பேசு
என்றாள்.
அந்த
வயிற்றுக்கட்டி ஆப்பரேஷன்
சரியாகச்
செய்திருந்தால்,
கேன்சரிலிருந்து
தப்பித்திருப்பேன்.
உங்களோடு
இருந்திருப்பேன் என்றாள்.
மகள்கள்
கல்யாணங்களைப்
பார்க்காமல்
போய்விட்டதைச் சொல்லி அழுதாள்.
பேசிக்கொண்டே
போனாள்…
நான்
புரண்டுபடுத்தேன்.
ஈரமான
தலையணையைத்
தள்ளிவைத்துவிட்டு
கையைத்
தலைக்கு
வைத்துக்கொண்டேன்.
விடிந்தவுடன்
சர்வீசுக்குக்
கொடுத்த போனை
வாங்கிவர
வேண்டும்!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
கவிதை அருமை.
ReplyDeleteகண்களில் கண்ணீர்
ReplyDeleteவர வைத்து விட்டது
இந்த கவிதை.
வாழ்க்கையில்
நம்மை நிலை குலைய
வைத்த சில சம்பவங்கள்
நினைவுகளாக...
அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டு.
நமக்கு இனியவர்களின்
ReplyDeleteபிரிவு என்றென்றும்
வடுக்களாய் நம் மனத்தில்
உறுத்திக் கொண்டே இருப்பதை
உருக்கத்துடன் கவிஞர்
வடித்தெடுத்திருக்கிறார்.
உள்ளம் தொடும் கவிதை.
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete