எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 15 August 2021

*குப்பை*

 

 

குளிர் பானத்தை

குடித்தப்படி ரயில்

நடைமேடையில்

நடந்து செல்லும்

இளைஞன்.

 

காலியான பின்

காகிதக் கோப்பையை

போடுவதற்கு தேடுகிறான்

குப்பைத்தொட்டியை.

 

கிடைக்காததால்

யாரும் பார்க்காத

ஒரு தருணத்தை

உறுதி செய்தபின்

பின் பக்கவாக

வீசுகிறான்

ரயில் பாதையில்..!

 

*கி.அற்புதராஜு*


13 comments:

  1. பிருந்தா16 August 2021 at 08:21

    குப்பையைப் போட
    குப்பைத் தொட்டியை
    தேடும் போது
    முன்னிருக்கும் கை
    தவறு செய்யும் போது
    பின்னோக்கி வருவது
    அவனின் அனிச்சை
    செயலாகும்.

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ராமலிங்கம்16 August 2021 at 16:18

    குப்பையை அகற்றுபவர்களை
    மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    1. குப்பைத்தொட்டியை
    தேடிக் கண்டு பிடித்து
    முறையாக அகற்றுபவர்கள்.

    2. குப்பைத்தொட்டியை
    தேடுவார்கள்.
    கிடைக்காவிட்டால்
    ஒரமாக போடுபவர்கள்.

    3. குப்பையை உடனே
    கீழே எறிபவர்கள்.

    இக்கவிதை நாயகன்
    இரண்டாம் வகை.
    தான் செய்வது தவறு
    என்று தெரிந்தும்
    மற்றவர்கள் பார்க்காத
    வண்ணம் செயல்படுகிறான்.

    சிறப்பு.

    ReplyDelete
  3. கெங்கையா17 August 2021 at 06:49

    கவிதை அருமை.
    உண்மை.

    ReplyDelete
  4. சத்தியன்17 August 2021 at 08:30

    பாராட்டுகள்.
    கவிதை அருமை.
    உண்மை அண்ணா.

    ReplyDelete
  5. சீனிவாசன்17 August 2021 at 10:03

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்17 August 2021 at 10:03

    மனித இயல்பை
    அழகாக சொல்லும்
    கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  7. குப்பையை தொட்டி இல்லாதது தான் தவறு.
    அருமை

    ReplyDelete
  8. ஆறுமுகம் S17 August 2021 at 17:16

    Sir Happening daily.

    ReplyDelete
  9. அறிவழகன்18 August 2021 at 07:09

    நன்றி.

    ReplyDelete
  10. நரசிம்மன் R.K18 August 2021 at 08:19

    True.
    வேதனை.
    கவிதை அருமை.

    ReplyDelete
  11. பாலமுரளி18 August 2021 at 21:37

    மனிதர்கள்
    எல்லா நேரத்திலும்
    ஒரே மாதிரி இருப்பதில்லை.

    ReplyDelete