எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 3 August 2021

படித்ததில் பிடித்தவை (“பூங்கொத்தும் குழந்தையும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பூங்கொத்தும் குழந்தையும்*

 

பூங்கொத்தோடு வந்தவர்

நண்பனின் வார்டை

தேடிக்கொண்டிருக்கிறார்.

 

நோய்மைக் குழந்தை

புன்னகைத்துப் பார்க்கிறது

முதலில் அவரை

பிறகு பூங்கொத்தை.

 

நின்றுவிடுபவர்

அருகில் போய்

குழந்தையின் தலைதடவி

பூங்கொத்தைத் தருகிறார்.

 

வாங்கி அணைத்து

சிரிக்கிறது குழந்தை.

 

ஒரு பூவை

கிள்ளி எடுத்து

குழந்தையின்

கன்னத்தை தடவிவிட்டு

ஓடுகிறார்

நண்பனைத் தேடி.

 

தூரமாகும் அவரைப்

பார்த்தபடியே

பூங்கொத்தில்

முகம் புதைக்கிறது

குழந்தை..!

 

*ராஜா சந்திரசேகர்*




1 comment:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete