*வார்த்தைகளுக்கு வசப்படாதவை*
“குழந்தைகளின் அழுகை
அழுகை
சார்ந்ததது அல்ல..!
விருப்பமின்மையின்
எதிரொலி..!
குழந்தைகளின்
புன்னகை
மகிழ்ச்சி
சார்ந்ததது அல்ல..!
மொழியின்
தேவைகளற்றும்
புரிதல்
நிகழ்ததன்
நன்றி
தெரிவித்தல்..!
சொற்களை
விடவும்
ஓசைகளும்
சைகைகளும்
உயர்ந்த
அர்த்தம் மிக்கவை.
என
குழந்தைகள் நமக்கு
உணர்த்தி
விடுகின்றன..!
குழந்தைகள்
பிழைப்பட
பேசும்
போதெல்லாம்
இலக்கணம்
தவறி
இலக்கியமாகின்றன..!
குழந்தைகள்
படைப்பின்
ரகசியங்களை
வியந்து
இரசிக்கின்றன..!
தானே
ஒரு வியக்கத்தக்க
படைப்பின்
அதிசயம்
என்பதையும்
மறந்து
இரசிக்கின்றன..!”
*அமீர் அப்பாஸ்*
அருமை.
ReplyDeleteமிக அருமையான
ReplyDeleteஉளவியல் உண்மை.
உணர்வுகள் புரிந்து விட்டால்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை என்ற
கவிதை வரிகள்
ஞாபகத்தில் வருகிறது.
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDelete