*இங்கு தூக்கம் விற்கப்படும்*
“பணப்பற்றாக்குறை,
வைட்டமின்
பற்றாக்குறை போல
நகரில்
திடீரென தூக்கம்
பற்றாக்குறை
ஆனது.
தூக்கமில்லாத
இரவுகளை
இருள்
சூழ்ந்திருந்தது.
வயதான
ஒருத்தி
டாக்டரிடம்
தன்
வேதனை
வலி சொல்ல,
தூங்கச்
சொல்லி
எழுதிக்
கொடுக்கிறார் டாக்டர்.
தூக்கம்
வாங்க
எங்கு
செல்வதென
அவளுக்குத்
தெரியவில்லை.
இரத்தம்
முதல் இருதயம் வரை
சுடச்சுட
புதிதாக கிடைக்கிறது,
ஆனால்
தூக்கம் தர ஆளில்லை.
வெளியில்
சென்று
வரும்போது
பார்த்தேன்,
தூக்கத்திற்காக
எவ்வளவு
பணம்
வேண்டுமானாலும்
தருவதாக
தொழிலதிபர் ஒருவர்
மெடிக்கல்
முன் வியாபாரம்
பேசிக்
கொண்டிருந்தார்.
ஆனாலும்
விற்க
அவனிடம்
தூக்கம் இல்லை.
வழியில்
ஒருவன்
கத்தியைக்
காட்டி
என்னை
மிரட்டி தூக்கம்
கொடுத்துவிட்டு
போகச் சொல்லி
மிரட்டுகிறான்.
நல்ல
வேலையாக
என்
தூக்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டுச்
சென்றதால்
என்
தூக்கம் பிழைத்தது.
என்வயது
நண்பன் ஒருவன்
தூக்கத்திற்காக
உயிரையே கூட
தருவதாகச்
சொல்கிறான்.
இங்கு
தூக்கத்திற்காக
உயிர்கள்
எடுக்கப்படுவதாக
பிரேக்கிங்
நியூஸ்
செய்திகள்
வருகிறது.
தூக்கம்
இங்கு விற்கப்படும்
என போலியான வியாபாரம்
தொடங்கப்பட்டுவிட்டன,
ஆனால்
யாருக்கும் தெரியவில்லை
தூக்கத்தை
எப்படி
வாங்கிச்
செல்வதென்று.
எங்கு
பார்த்தாலும் தூக்கம்
குறைந்து
கொண்டே செல்கிறது,
தூக்கம்
உற்பத்தி செய்ய
இன்னும்
எந்த நாட்டு
விஞ்ஞானிகளும்
மாத்திரைகளோ,
விஷமோ
வெளியிடவில்லை.
ஐயோ!
எனக்கும் தூக்கம்
கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைகிறது.
என்னிடம்
மிச்சமிருக்கும்
கொஞ்ச
தூக்கத்தில்
நான்
தூங்கச்செல்கிறேன்..!”
*இரகுபதி*
கவிதை அருமை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்.
வரும் நாட்களில்
ReplyDeleteமனிதர்களின் நிலைமையை
வேடிக்கையாக எடுத்துரைத்த
அருமையான கவிதை.
Have a deep sleep sir.
ReplyDelete