*மின்னலின் தீண்டல்*
“கருணையைக் கொண்டு வருகிறீர்கள்.
சொர்க்கத்தின்
சாவியை எடுத்து வருகிறீர்கள்.
ஒரு
மலரைத் தாங்கி வருகிறீர்கள்.
கேள்வியின்
வெளிச்சத்தால்
உங்கள்
இருளை அழிக்கும்
ஜோதியை
ஏந்தி வருகிறீர்கள்.
அலுப்பெனும்
தீரா
நோயின்
மருந்துடன்
வருகிறீர்கள்.
அருவியின்
குளிர்ச்சியை,
நதியின்
மலர்ச்சியை,
நிலவின்
ஒளியை,
நட்சத்திரங்களின்
அழைப்பை,
மின்னலின்
தீண்டலை,
உன்னதத்தின்
முழுமையை
அள்ளியெடுத்து
அரவணைத்து வருகிறீர்கள்.
ஒரு
குழந்தையை ஏந்தி வரும் நீங்கள்..!”
*கரிகாலன்*
மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteநன்று.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete