எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 29 August 2021

படித்ததில் பிடித்தவை (“அக்காவின் கைகள்” – மு.முருகேஷ் கவிதை)

 


*அக்காவின் கைகள்*

 

துடைப்பம்,

பால் பாக்கெட்,

கரண்டி,

காய்கறி,

அழுக்குத் துணி,

சோப்பு என

ஏதேனுமொன்று

அக்காவின் கைகளில்

எப்போதும் தென்படும்.

 

வீட்டுக்கு ஒதுங்கும்

அந்த நாட்களில் மட்டும்

அபூர்வமாய் பார்க்க முடிகிறது

அக்காவின் கையில்

புத்தகமொன்றை..!

 


*
மு.முருகேஷ்*



4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மு.முருகேஷ்*

    இவர் முப்பதாண்டு
    காலமாகத் தொடர்ந்து
    எழுதிக் கொண்டும்,
    பல்வேறு இலக்கியச்
    செயல்பாடுகளில் ஈடுபட்டும்
    வரும் படைப்பாளியாவார்.
    திருவண்ணாமலை மாவட்டம்
    வந்தவாசியில் இருக்கும்
    அம்மையப்பட்டு கிராமத்தில்
    வாழ்கிறார்.
    ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில்
    முதுநிலை உதவி ஆசிரியராகப்
    பணிபுரிகிறார்.

    குழந்தை இலக்கியப் படைப்பாளி,
    கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ்
    ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி
    ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப்
    பன்முகங்களுடன், சமூகம், கல்வி
    மற்றும் இலக்கியப் பணிகளில்
    ஆக்கப்பூர்வமான
    செயல்பாடுகளைச் செய்துவரும்
    படைப்பாளியாகவும் தொடர்ந்து
    இயங்குகிறார்.

    அன்றாட வாழ்வின் சாதாரண
    நிகழ்ச்சிகளைச்
    சொற்சிக்கனத்தோடு
    படைப்புகளாக்கி வருவது
    இவரது இயல்பாகும்.
    முருகேஷின் படைப்புகளில்
    இதுவரை 6 கல்லூரி மாணவர்கள்
    இள முனைவர் பட்ட ஆய்வும்,
    3 மாணவர்கள் முனைவர் பட்ட
    ஆய்வும் செய்துள்ளனர்.

    முருகேஷ் எழுதிய நூல்கள்
    மதுரை காமராசர்
    பல்கலைக்கழகப்
    பாடத்திட்டத்திலும், விருதுநகர்
    வன்னியப் பெருமாள் மகளிர்
    கல்லூரிப் பாடத்திட்டத்திலும்,
    சிவகாசி அய்யநாடார்
    ஜானகி அம்மாள் கல்லூரி
    பாடத்திட்டத்திலும்
    இடம்பெற்றுள்ளன.
    தமிழ் இலக்கிய வரலாற்றில்
    ஐக்கூவிற்கு ஒரு தனியிடம்
    உருவாக்குவதற்காக
    முயன்றவர்களில் முருகேஷும்
    ஒருவர் எனலாம்.
    தமிழக அரசின் சமச்சீர்
    பாடத்திட்டக் குழுவில்
    இடம்பெற்று முதல் வகுப்பு
    மற்றும் ஆறாம் வகுப்பு பாட
    நூல்கள் உருவாக்கத்திலும்
    முருகேஷ் பங்களிப்பு
    செய்துள்ளார்.

    கேரள மாநில அரசின்
    அழைப்பின் பேரில் திருச்சூரில்
    நடைபெற்ற எழுத்தச்சன்
    விழாவின் கவிதை வாசிப்பு
    நிகழ்வில் கலந்துகொண்டார்.
    2012-ஆம் ஆண்டு இலங்கையில்
    நடைபெற்ற உலகச் சிற்றிதழ்கள்
    சங்க மாநாட்டில் சிறப்பு
    விருந்தினராகப் பங்கேற்றார்.
    2013-ஆம் ஆண்டு சிங்கப்பூரில்
    நடைபெற்ற உலகப்
    படைப்பாளர்கள் கருத்தரங்கில்
    சிறப்புப் பிரதிநிதியாகப்
    பங்கேற்றார்.
    விசயவாடாவில் இந்திய அரசின்
    சாகித்திய அகாதமி நடத்திய
    ‘சிறுவர் இலக்கியத்தின்
    வளர்ச்சியும் போக்கும்’ என்ற
    தலைப்பிலான தேசிய
    கருத்தரங்கில் பங்கேற்று
    கட்டுரை வாசித்தார்.

    தமிழ்நாட்டின் புதுக்கோட்டை
    மாவட்டத்திலுள்ள
    திருக்கோகர்ணத்தில்
    முருகேஷ் பிறந்தார்.
    இயற்பெயர் மு.முருகேசன்.
    இயந்திரப் பொறியியலில்
    பட்டம் பெற்ற இவர், பின்னர்
    தமிழில் இள முனைவராகப்
    பட்டம் பெற்றுள்ளார்.
    திருவண்ணாமலை மாவட்டம்
    வந்தவாசியில் வாழ்ந்து
    வருகிறார்.
    இவரது மனைவி
    அ.வெண்ணிலா
    தமிழ் இலக்கிய உலகின்
    முன்னணி கவிஞர்,
    நாவலாசிரியர், வரலாற்று
    ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு
    உரியவராவார்.

    ReplyDelete
  2. செல்லதுரை29 August 2021 at 13:55

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்29 August 2021 at 16:48

    மிக அருமை.
    ஆனால் யதார்தத்தில்
    இன்றைய தலைமுறை
    மிகவே மாறிவிட்டது.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K29 August 2021 at 16:49

    நன்று.

    ReplyDelete