*குளவி இல்லம்*
சமையலறை
ஜன்னல்
வழியே நுழைந்து
வீட்டுக்குள்
வட்டமடித்த
குளவியொன்று
கதவுக்குப்
பின்னே மறைந்து
ஓரே
மூச்சில் கூடுகட்டி
குடியேறியும்
விட்டது.
அகற்றும்
அவசரத்தில்
அப்பாவும், பிள்ளைகளும்.
ஏக்கப்பெருமூச்சோடு
அவள்
சொன்னாள்,
“அதுவாச்சும்
சொந்தமாய்
கட்டிய வீட்டில்
இருந்துவிட்டு
போகட்டுமென..!”
*காசாவயல் கண்ணன்*
கவிதை மிக அருமை.
ReplyDeleteஏழை அன்னையின்
ReplyDeleteஏக்கத்தின் வெளிப்பாட்டை
தெளிவாக கூறியுள்ளார்
கவிஞர் அண்ணா.
அருமையான கவிதை.
Nice.
ReplyDeleteVery Superb Sir.
ReplyDelete