“நினைவாற்றல் குறைந்துக்
கொண்டே
வருகிறது இப்போதெல்லாம்...
நன்றாக பழகிய நண்பரின் பெயர்
முட்டி மோதி குட்டிக்கரணம்
போட்டாலும்
நினைவுக்கு வர மறுக்கிறது.
எனது அலைப்பேசி எண்
சமயங்களில்
எனக்கே மறந்துப்போகிறது.
நேற்று பேருந்தில் சென்ட்ரலில்
ஏறி
சென்ட்ரல் ஒரு டிக்கெட் என
நடத்துனரிடம் கேட்ட நிகழ்வு
பயணம் முழுவதும் சிரிக்க
வைத்தது...
எனக்கு ஒரே மகன்தான் என
நன்றாக
தெரிந்த அலுவலக நண்பர் கூட
‘குழந்தைகள் எப்படி
இருக்கிறார்கள்?’
என கேட்டதும் அன்றே
நிகழ்ந்தது..!”
-
K. அற்புதராஜு.
No comments:
Post a Comment