“நமக்கு தெரிந்தவர்களை
எதிர் எதிரே சந்திக்கும்
போது...
நாம் பார்க்கும் போது
அவர்கள் பார்க்காமல்,
அவர்கள் பார்க்கும் போது
நாம் பார்க்காமல்,
பட்டும் படாமல்
ஓரப்பார்வை பார்த்து
உறுதி செய்துக்கொள்வோம்இருவரும்
நான் உன்னை
பார்க்கவில்லை என...
இருவர்க்குள்ளும்
ஈகோ எட்டிப்பார்க்கும்
யார் முதலில் பேசுவது என...
கடைசி சந்தர்ப்பம் வரை
பேசாமலே கடந்து விடுவதும்
நடந்து விடுகிறது
சமயங்களில்...”
-
K. அற்புதராஜு.
No comments:
Post a Comment