“அத்தனை பேர் கூடி
ரயிலுக்குக் காத்திருக்கையில்
என்னிடம் மட்டும் பிரியம் வைத்து
ஒரு காக்கை
தலை தட்டிச் சென்றதும்
கேன்டினில் கொஞ்சம்
தண்ணீர் வாங்கி
சனி கழிய
தலையில் தெளித்துப் போவென
பரிவாகச் சொன்னாள்
பெண்ணொருத்தி..!”
- யூமா. வாசுகி.
(கவிதை தொகுப்பு: இரவுகளின் நிழற்படம்)
No comments:
Post a Comment