படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)
1. “பசி மயக்கத்தோடு
மாலை வரை
நடந்து களைத்த
கிளி ஜோசியக்காரன்,
காலையிலேயே
தனக்கொரு சீட்டெடுத்து
பார்த்திருக்கலாம்..!"
- இரா. கமலக்கண்ணன்.
2. “ஐந்தறிவு
ஆறறிவை
வாழ வைத்தது...
கிளி,
கிளி ஜோசியனை..!”
- இரா. கமலக்கண்ணன்.
No comments:
Post a Comment