“காலையில் வீட்டிலிருந்து
வேலைக்கு கிளம்பி
செல்கையில்...
தெரு கோவிலில்
முருகனையும்,
ஸ்டேஷன் ரோடு கோவிலில்
ராமரையும்,
அலுவலக வாயில்
பிள்ளையாரையும் நினைத்து
மனதுக்குள் மானசீகமாக
வணங்கி செல்லும் நான்,
மாலையில்...
சென்ற வழியிலேதான்
வீடு திரும்புகிறேன்
எந்த கடவுளையும்
நினைக்காமலே..!”
-
K. அற்புதராஜு.
No comments:
Post a Comment