அப்பா
“வாருங்கள்
எனது அப்பாவைப் படிப்போம்.
அழகிய வாழ்க்கை.
செல்லமாய் எனது அப்பாவின்
கன்னம் கிள்ளி
செவியைத் திருகி
தலையில் குட்டி
அவரின் மனதில்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவள் நான்.
அப்பா...அப்பா...அப்பா...
சொல்லிப் பாருங்கள் நீங்களும்.
எனக்குள் சந்தோஷம்
நிரம்பி வழிகிறது.
தூவானத்துடன் கூடிய மழை நாள்.
அப்பாவின் கையில் தேநீர்.
அப்பாவின் மடி.
சங்கீதம்.
திருட்டுத்தனம்.
பொய்.
வீடெங்கும் அமைதி.
அப்பாவின் புன்சிரிப்பு.
விடுமுறை நாள்.
எனது களவு.
கண்டும் காணாமல்
அப்பாவின் செருமல்.
தொடுகை.
அரவணைப்பு.
விழிமொழி.
புன்சிரிப்பு.
புரியாத புதிர் அப்பா.
மெலிதான அதட்டல்.
கோபமான பார்வை.
தடியெடுப்பது போன்ற பாவனை.
ஆனாலும் அப்பா
தோற்றுப்போவது
ஏனோ என்னிடம்தான்..!”
- நளாயினி.
No comments:
Post a Comment