எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 2 July 2014

உப்பு


“விருந்தினர் வருகையின்போது
காலையில் மனைவி செய்த
பூ போன்ற இட்லியும்...

மதிய உணவிற்கான
முருங்கைகாய் சாம்பாரும்,
மெது வடையும்,
அவல் பாயசமும்...

மாலையில் செய்த
குழி பனியாரமும்...

நன்றாயிருந்தது என்று
எல்லோராலும்
பாராட்டப்பட்டது என்றாலும்...

இரவில் செய்த
முடக்கத்தான் தோசைக்கான
சட்டினியில் உப்பு அதிகம்
என்று சொல்லியது
அத்தனை சந்தோஷத்தையும்
பாழாக்கியது..!”

             -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment