எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 19 July 2014

பார்த்ததில் பிடித்தது (கர்ண மோட்சம் - குறும்படம்)


கர்ண மோட்சம் – குறும்படம்


காணொளி காட்சி



கதை – வசனம்  :     எஸ். ராமகிருஷ்ணன்

இயக்கம்        :     முரளி மனோகர்


தேசிய விருது பெற்ற குறும்படம்.



கர்ணவேஷம் கட்டும் கூத்துக் கலைஞரான கோவிந்தன் தன் மகனை உடன் அழைத்துக் கொண்டு ஒரு பள்ளி விழாவில் கூத்து கட்டுவதற்காக வருகிறார். விழாவோ தவிர்க்க முடியாமல் ரத்தாகி விடுகிறது. தலைமை ஆசிரியையிடம் கோவிந்தனால் தொலைபேசியில் மட்டுமே பேச முடிகிறது. கையில் இருந்த 50 ரூபாயையும் செலவழிந்து விட்ட நிலையில் தவிக்கும் கோவிந்தனை, இரவு 7 மணிக்குத் தன் வீட்டுக்கு வரும்படியும் தான் உதவி செய்வதாகவும் கூறி முடித்துக் கொள்கிறார் தலைமையாசிரியை. ஒரு பக்கம் பசி, இன்னொரு பக்கம் நவீன உலகின் கனவுகளைச் சுமந்தபடி கிரிக்கெட் மட்டை வாங்கித் தருமாறு நச்சரிக்கும் சிறுவனான தன் மகன், கையில் பணமின்றி இவற்றைச் சமாளித்து 7 மணி வரை கடத்தியாக வேண்டிய பொழுது-தடுமாறிக் கொண்டிருக்கும் கோவிந்தனுக்கு ஒரு வாய் பேச முடியாத ஏழைச் சிறுமியின் அறிமுகம் நிகழ்கிறது. சிறுமி தான் வேலை செய்யும் தள்ளுவண்டிக் கடையிலிருந்து இட்லி கொண்டு வந்து கொடுத்து கோவிந்தனை உபசரிக்கிறாள்; கூத்து பற்றி கோவிந்தன் சொல்லும்விஷயங்களுக்கு செவி கொடுக்கிறாள்; அவன் சொல்லிக் கொடுத்த முறையிலேயே அவனுக்கு குருவணக்கம் தெரிவித்து ஒரு ரூபாய் நாணயத்தை தட்சணையாகக் கொடுத்து விட்டு ஓடி மறைகிறாள். அவள் மதிப்பாகக் கொடுத்த அந்த ஒரு ரூபாய் மூலம் கோவிந்தனுள் புழங்கும் கூத்து வடிவக் கர்ணன் மோட்சமடைகிறான்.


-          இது கர்ண மோட்சத்தின் கதை.


                       










நிபந்தனைகள்:

1. இந்த காணொளி காட்சி    https://www.youtube.com/watch?v=qrW7s0DcRMA     
    இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்
    வெளியிடப்படவில்லை.

3. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால்
    arputharaju.k@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment