எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 4 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

அம்மன் சிரிக்கிறாள்
“கோடை காலம் எங்கும்
அம்மன் கோவில்கள் எங்கும்
கஞ்சி காய்ச்சல்
கூத்து கும்மாளங்கள்
இசைக் கச்சேரிகள்
குறையவே இல்லை
ஒவ்வோர் ஆண்டைப் போலவே
இவ்வாண்டும் வீட்டு வேலை செய்யும்
தனலெட்சுமி தன் பிள்ளைகளோடு
கஞ்சி கியூவில் நிற்கிறாள்
காலங்காலமாய் தனலெட்சுமிகளைக்
பார்த்துக்கொண்டே பூரித்துக்கிடக்கிறாள்
அலங்காரமும்
ஆர்ப்பாட்டமுமாய்
அம்மன் சிரிப்பு மாறாமல்.”
                                                                   - ஹரணி.

No comments:

Post a Comment