எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 25 July 2014

அந்த அழகான கவிதையை படிக்க வேண்டுமா..?


அது ஒரு அழகான கவிதை.
அப்படி ஒரு கவிதையை
நான் இதுவரை படித்ததேயில்லை.
நீங்களும் படித்திருக்க
வாய்ப்பேயில்லை.

அந்த கவிதையின்
ஓவ்வொரு வரியிலும் காதல்.

இந்த கவிதையை எழுதியவன்
நாளிதழுக்கு அனுப்பி
அவர்கள் பிரசுரிக்க
தவறியிருந்தால்
அது அந்த நாளிதழுக்கும்
அதை படிக்கும் வாசகர்களுக்கும்
பெரிய இழப்புதான்.

எப்படியோ எனக்கு
அதை படிக்கும் வாய்ப்பளித்த
ஆண்டவனுக்கு நன்றி
சொல்லியே ஆக வேண்டும்.

தினமும் ஆயிரக்கணக்கானோர்
படிக்கும் அந்த கவிதையை 
நீங்களும் படிக்க வேண்டுமா..?

சென்னை புறநகரில்
ஓடும் 12220 எண்ணுள்ள
மின்சார ரயிலின்
முதல் பெட்டியில்
மார்க்கர் பேனாவால்
எழுதப்பட்ட அழகான
அந்த கவிதையை படிக்க...

அந்த ரயில் பெட்டியில்
பிரயாணிக்க வேண்டும்
நீங்கள்..!
                -    K. அற்புதராஜு.





2 comments: