“மினி ஸ்கர்ட் நடிகையை
எனக்குப் பிடித்திருக்கிறது.
அவள் ஆட்டத்தில் கிறங்கி
மெய் மறந்து கிடக்கலாம்.
அவள் உந்திச் சுழியில்
கண் குவித்து மிரளலாம்.
மார்பு கூந்தல் பிருஷ்டம்
பாதம் இடை உதடுகள்
எங்கும் தளும்பி வழிகிறது அழகு.
காதலிலோ தற்கொலையிலோ
அவள் விழாதிருந்தால்
அவளுக்காக என்னவும் செய்யலாம்.
அவள் சாதாரணமானவளில்லை.
வேண்டுமானால் பாருங்கள்...
நாளை அவளுக்காக
நீங்கள்
வோட்டுப்
போடுவீர்கள்..!”
- கவிஞர். யுகபாரதி. (பற்பல மதியங்களில்...)
(உந்தி – தொப்புள்)
No comments:
Post a Comment