எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 2 October 2014

படித்ததில் பிடித்தவை (கடிதக்கதை – சுஜாதா)


அண்ணாசாமிக்கு ஒரு கடிதம் சுஜாதா



இந்தக் கடிதக் கதையைப் பாருங்கள்:
"அன்புள்ள அண்ணாசாமி அவர்களுக்கு
எங்கள் அலுவலகத்தில் விசாரித்ததில் தாங்கள் இதுநாள் வரை உண்மை விரும்பி என்னும் எங்கள் பத்திரிகைக்கான சந்தாவை அனுப்பவில்லை என்று தெரிகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக தங்களுக்கு நாங்கள் இலவசமாக உண்மை விரும்பியை அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதம் கண்ட உடன் பத்திரிகைக்கான சந்தாவான ரூபாய் 30 மட்டும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சுயவிலாசமிட்ட, போதிய தபால்தலை ஒட்டிய உறையில் அனுப்பி, இந்த முக்கியமான பத்திரிகைக்கு ஆதரவளித்து இன்னும் ஒரு ஆண்டு பெறுவீர்கள் என நம்புகிறோம்.
உண்மை விரும்பி மற்றவர் வாழ்க்கையில் வேவு பார்க்க ஏற்பட்ட பற்பல சிறு கேமரா, மைக்ரோ மைக் போன்ற சாதனங்களை எளிமையாக விளக்குகிறது என்பது எங்கள் கடந்த இதழ்களைப் பார்வையிட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும். வரும் இதழிலிருந்து மனைவியர்-கணவர்களை வேவுபார்ப்பது” பற்றிய சுவாரஸ்யமான தொடர் தொடங்க உள்ளது.
இதனால் உடனே செயல்பட்டு, உங்கள் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவீர்கள். தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை என்று நம்புகிறோம்.
இப்படிக்கு,
துர்வாசா பப்ளிகேஷனுக்காக
சங்கரன் நடராஜன்.
பின்குறிப்பு:  சந்தா  அனுப்புவதில்லை  எனத் தீர்மானித்தால் இதே  உறையில்,   என்ன  காரணம்   என்பதை   கடிதமாகத் தெரிவித்தால், பத்திரிகையின் முன்னேற்றத்துக்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.
-
இவண் ச.ந."
** ** **

(நன்றி: http://balhanuman.wordpress.com/)

No comments:

Post a Comment